[X] Close

மனைவி, குழந்தை கழுத்தை அறுத்து கொன்றவர் தற்கொலை முயற்சி

Husband-killed-Wife-and-Son--Then-attempt-Murder-in-Namakkal

நாமக்கல்லில் அருகே மனைவி மற்றும் குழந்தையைக் கொலை செய்து விட்டு கணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


Advertisement

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி எடுத்த மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கெளரி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவருக்கு இரண்டு வயதில் புகழ்வின் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில் சுரேஷ் நேற்று மாலை அவரது தோட்டத்தின் அருகே உள்ள கிணற்றுக்கு அருகில் தனது மனைவி மற்றும் மகனை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். பின்னர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 


Advertisement

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கௌரி மற்றும் புகழ்வின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது தெரியவந்தது. சுரேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இச்சம்பவம் குறித்த எருமப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், லாரி ஓட்டுநர் சுரேஷ் தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் காரணமாக தனது மனைவியையும் மகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close