[X] Close

பேருந்து தீப்பிடித்து விபத்து - 27 பயணிகள் பரிதாப பலி

Motihari-At-least-27-charred-to-death-as-bus-catches-fire-after-accident

பீகார் மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முஸாப்பர்பூர் நகரில் இருந்து புதுடெல்லிக்கு சென்ற பேருந்து மோடிகரியில் உள்ள பெல்வா பகுதியில் விபத்துக்குள்ளானது. மாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்கு பேருந்து ஓட்டுநர் முயற்சித்துள்ளார். அப்போது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சென்றது. அதனால் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 27 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

           


Advertisement

பேருந்தில் சுமார் 32 பேர் பயணம் செய்த நிலையில், 4 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து நடந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement
[X] Close