Published : 27,Dec 2017 11:47 AM

பிலிப்பைன்ஸை தொடர்ந்து வியட்நாமை மிரட்டும் டெம்பின் புயல்

Tembin--Storm-move-near-southern-Vietnam

பிலிப்பைன்ஸை தாக்கிய டெம்பின் புயல், வியட்நாமை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் மாகாணத்தை புரட்டி போட்ட டெம்பின் புயலால், 200 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். சுமார் 70 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளப் பெருக்கு காரணமாக மண் சரிவு ஏற்பட்டதில், மின்டானாவ் மாகாணத்தில் உள்ள துகாயா கிராமம் கடுமையாக சேதமடைந்துள்ளது. வீடுகள் மண்ணில் புதைந்தில் 30 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் காணாமல்போன 60 பேரை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸை தாக்கிய டெம்பின் புயல், வியட்நாமை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அருகில் இருக்கும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாகாணமான பாக் லியூவில் உள்ள மீனவர்களும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்