Published : 11,Nov 2017 06:40 AM
பாதையை மறைத்த பனி: ஆற்றுக்குள் பாய்ந்தது பஸ்

பனிமூட்டம் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பேருந்து ஒன்று பாலத்திலிருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் கடும் பனி மூட்டம் காரணமாக பாதை தெரியாமல் ஒரு பேருந்து பாலத்திலிருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 4 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பனி மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகியுள்ளது.