Published : 03,Oct 2017 04:57 AM

ஹெராத் சுழலில் சிக்கி வீழ்ந்தது பாகிஸ்தான் அணி

Sri-Lanka-win-a-gripping-1st-PAKvSL-Test--bowling--Pakistan-out-for-114-to-win-by-21-runs

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபில் நடைப்பெற்றது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 419 ரன்களும், பாகிஸ்தான் அணி 422 ரன்களும் சேர்த்தன. 3 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்து. கடைசி நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பின்னர் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி ஹெராத் மற்றும் தில்ருவன் பெரராவின் சுழலில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தனர். பாக் அணி 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது மற்றும் கடைசி போட்டி துபாயில் 6ஆம் தேதி தொடங்குகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்