இதுவும் ஒரு தாஜ்மஹால் தான்! அரியலூரில் இறந்த மனைவிக்காக கணவன் கட்டிய கோயில்! வியக்கும் கிராம மக்கள்!

அரியலூரில் ஓர் தாஜ்மஹால்.. உடல்நலக்குறைவால் இறந்த மனைவிக்காக கணவர் கட்டிய கோவில் பலரையும் வியக்க வைத்துள்ளது.
மனைவிக்கு கட்டிய கோவில்
மனைவிக்கு கட்டிய கோவில்புதிய தலைமுறை

அரியலூர் - இறந்த போன மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த கணவன்.

மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து சாமியாக வணங்க செய்த சம்பவம் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.

மனைவிக்கு கட்டிய கோவில்
உத்தரகாண்ட் | குப்பையை கொளுத்தப்போய் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ.. அழிவின் விளிம்பில் உயிர்கள்!

இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கற்பகவள்ளி என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கோமகன் என்ற 5 வயது மகன் உள்ளார்.

இந்நிலையில் கற்பகவள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கல்லீரல் செயலிழப்பு காரணமாக 2023 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அப்பொழுது கோபாலகிருஷ்ணன் ’என்னால் உன்னை காப்பாற்ற முடியாவிட்டால் உனக்காக கோயில் கட்டி ஊரையே உன்னை சாமியாக கும்பிட வைப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஓராண்டு முடிவுற்ற நிலையில் கற்பகவள்ளி புதைக்கப்பட்ட சொந்த இடத்தில் அவரது உருவப்படம் வைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்துள்ளார் கோபாலகிருஷ்ணன்.

கற்பகவள்ளி கணவன் கோபாலகிருஷ்ணனின் இந்த சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாய்மொழியாக கோவில் கட்டுவேன் என்று படங்களில் வருவது போல் இல்லாமல் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டி செய்கையில் செய்து காண்பித்துள்ளார் கணவர் கோபாலகிருஷ்ணன்.

இச்செயல் பல்வேறு தம்பதியினருக்கு உதாரணமாக விளங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com