மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெற்றார் மாயாவதி! பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தனது மருமகன் ஆகாஷ் ஆனந்த்தை அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
மாயாவதி, ஆகாஷ் ஆனந்த்
மாயாவதி, ஆகாஷ் ஆனந்த்ட்விட்டர்

உத்தரப்பிரதேசத்தின் பிரதான கட்சிகளில் ஒன்று, பகுஜன் சமாஜ். இக்கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளார். இவர், தன்னுடைய அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் தனது மருமகன் (அண்ணன் மகன்) ஆகாஷ் ஆனந்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார். இதையடுத்து, அவரும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், ஆகாஷை அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெறுவதாக மாயாவதி தெரிவித்துள்ளார்.

”அவர் அரசியல்ரீதியாக முதிர்ச்சி அடையும்வரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்” என மாயாவதி அறிவித்துள்ளார். ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டாலும் தனது சகோதரரும் ஆகாஷின் தந்தையுமான ஆனந்த் குமார் முன்புபோலவே தனது பொறுப்புகளை நிறைவேற்றுவார் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.

என்ன காரணத்துக்காக ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை. எனினும் அவரது திடீர் நீக்கம் உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “ஜெய்ஸ்ரீராம் எனச் சொல்லாவிட்டால்” - எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் நவ்நீத் கவுர் ராணா!

மாயாவதி, ஆகாஷ் ஆனந்த்
அரசியல் வாரிசை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி!

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் சீதாபூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசார பேரணியின்போது ஆட்சேபகரமான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் ஆகாஷ் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான், மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார் மாயாவதி. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியைத்தான் அவர் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பகுஜன் சமாஜ் கட்சி என்பது பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் சுயமரியாதை மற்றும் சமூக மாற்றத்திற்கான இயக்கம் மற்றும் ஸ்ரீகன்ஷி ராமும் நானும் அதைச் செய்துள்ளோம். எங்கள் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்துள்ளோம், மேலும் ஒரு புதிய தலைமுறையும் அதற்கு வேகம் கொடுக்க தயாராகி வருகிறது. கட்சியில் உள்ள மற்றவர்களை ஊக்குவிப்பதோடு, கட்சி மற்றும் இயக்கத்தின் பெரிய நலன் கருதி, ஆகாஷ் ஆனந்த் அரசியலில் முழு முதிர்ச்சி அடையும் வரை இந்த இரண்டு முக்கியப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஹரியானா| பாஜக அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள்.. அடுத்து என்ன?

மாயாவதி, ஆகாஷ் ஆனந்த்
“மக்களவை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்ற முடிவை நாங்கள் எடுக்க இதுவே காரணம்” - மாயாவதி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com