ம.பி.| ஆம்புலன்ஸ் தராத நிர்வாகம்.. தீயில் கருகிய குழந்தையின் சடலத்தை டூவீலரில் கொண்டுசென்ற கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தையைக் கொண்டுசெல்ல அமரர் ஊர்தி வாகனம் கிடைக்காத நிலையில், சடலத்தை உறவினர்கள் டூவீலரிலேயே கொண்டுசென்ற கொடுமை மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
viral image
viral imagetwitter

வான்வெளியில் ஏவுகணைகளை அனுப்பி, உலக நாடுகளுக்கு எதிராக தாமும் ஒரு வல்லரசு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில்தான், ஆழ்துளைக் கிணறு சம்பவங்களும், அதன்மூலம் பலியாகும் துர்பாக்கிய செய்திகளும் வந்துகொண்டிருக்கிறது. அதேபோல், உயிரைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வராததும், உயிரிழந்த உயிர்களைக் கொண்டுசெல்வதற்கு அமரர் ஊர்தி வாகனங்களும் தராமல் இருப்பதும் இன்னும் வேதனையின் உச்சமாக இருக்கிறது. உயிரிழந்த குழந்தையைக் கொண்டுசெல்ல அமரர் ஊர்தி வாகனம் கேட்டு, அதைத் தர மறுத்ததால், சடலத்தை உறவினர்கள் டூவீலரிலேயே கொண்டுசென்ற கொடுமை மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரியில் உள்ள புர்கா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹீரா உய்கே. இவரது மனைவி கமலா பாய். இவர்களுக்கு 3 குழந்தைகள். இவருடைய மூத்த மகன் சந்தன் ராஜ். 4 வயதான இந்தக் குழந்தை ஒரு மாற்றுத்திறனாளி ஆகும். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவம் பார்த்தும் பலனில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: "அதானி, அம்பானி குறித்து ராகுல் பேசாதது ஏன்?".. கேள்வியெழுப்பிய பிரதமர்.. பதிலடிகொடுத்த பிரியங்கா!

viral image
பீகார்: அமரர் ஊர்தி இன்றி உடலை தோளில் சுமந்து சென்ற அவலம்

இந்த நிலையில், கடந்த மே 6ஆம் தேதி அந்தக் குழந்தையின் பெற்றோர் இருவரும் வெளியில் சென்றிருந்தனர். அன்றைய தினத்தில் மாலை வேளையில் சந்தன் ராஜுடன் மற்ற இரண்டு குழந்தைகளும் வீட்டுக்குள் விளையாடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக குடிசை தீப்பற்றி எரிந்ததில், சந்தன் ராஜின் தம்பியும் தங்கையும் வெளியில் ஓடிவிட்டனர். ஆனால், சந்தன் ராஜுவால் ஓடமுடியாததால் உள்ளுக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். இந்தச் சம்பவம் அறிந்து ஊர் மக்களே தீயை அணைத்துள்ளனர். ஆனாலும், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

தவிர, இறந்த குழந்தையின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அப்போது போலீசாரிடம், ”குழந்தையின் உடலை நாங்கள் எப்படி எடுத்துச் செல்வது? வாகனம் ஏற்பாடு செய்து தரவும்” எனக் கேட்டுள்ளார் குழந்தையின் தந்தை ஹீரா உய்கே. அதற்கு போலீசாரும் மருத்துவமனை நிர்வாகமும், “பைக்கில் எடுத்துச் செல்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தையின் உடலைக் கூடையில் வைத்தப்படி உறவினருடன் தன் வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார், தந்தை. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்க்கும் பலரும், ’மனிதநேயத்தையே வெட்கப்பட வைக்கிறது’ எனப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா: அவுரங்காபாத், உஸ்மானாபாத் பெயர்களை மாற்ற எதிர்ப்பு..மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

viral image
அமரர் ஊர்தி இல்லாததால் அவலநிலை :பிணத்தை சுமந்து செல்லும் பொதுமக்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com