தமிழ்நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் | அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!

தமிழ்நாட்டில் சமீபகாலமாக சதத்தை தாண்டி வெப்பம் வெளுத்துவாங்கிவரும் நிலையில், நாளை முதல் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம் முகநூல்

சமீப காலத்தில் தமிழ்நாடு மிக அதிக வெப்பத்தை சந்தித்துவருவதால், வானிலை ஆராய்ச்சி மையம் நாளை முதல் வெப்ப அலை எச்சரிக்கையை அறிவிக்கவில்லை என கூறியுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில், இன்று வெப்ப அலை தொடரும். ஆனால், நாளை முதல் வெப்ப அலைக்கான எச்சரிக்கை இல்லை. மேலும், தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம்
கோவை: ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் சொகுசு வாழ்க்கை - போலி ரசீது மூலம் சிக்கிய நபர் கைது

வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து, இதனால், சமீபத்தில் கூட மதுரையை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் வலிப்புநோய் ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் மக்களிடையே வெப்பத்தாக்கம் குறித்த அச்சத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சற்று ஆறுதலை அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com