உத்தரகாண்ட் | குப்பையை கொளுத்தப்போய் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ.. அழிவின் விளிம்பில் உயிர்கள்!

உத்தரகாண்ட் தீ விபத்து: மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்
காட்டில் ஏற்பட்ட தீ விபத்து
காட்டில் ஏற்பட்ட தீ விபத்துபுதிய தலைமுறை

உத்தரகாண்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அப்பகுதி வாழ் மக்கள் மட்டுமன்றி அங்கு வசிக்கும் வனவிலங்குகள், பறவைகளும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் உத்தரகாண்ட் பித்தோராகர் மாவட்டத்தின் கங்கோலிஹாட் வனப்பகுதியில், பியூஷ் சிங், ஆயுஷ் சிங், ராகுல் சிங் மற்றும் அங்கித் ஆகியோர், குப்பைகளை சேமித்து தீ மூட்டியுள்ளனர். இந்த தீயானது அப்பகுதியில், மளமளவென பரவி, காட்டுத்தீயாக மாறி, சுமார் 23.75 ஹெக்டேர் வனப்பகுதியை சேதப்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, இவர்களால் ஏற்பட்ட காட்டுத்தீயானது மேலும் அதிகரித்து மளமளவென பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. புலிகள், யானைகள், சிறுத்தைகள் மற்றும் பலவகையான பறவைகள், இவை தவிர ஊர்வன பூச்சிகள் போன்ற உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காட்டில் ஏற்பட்ட தீ விபத்து
ஹைதராபாத்: விடாது பெய்த கனமழை... கட்டுமானத்தில் இருந்த அடுக்குமாடி கட்டடம் இடிந்து 7 பேர் மரணம்

இதுகுறித்து சுற்றுச்சூழல் புகைப்படக்கலைஞர் அனுப்சா என்பவர், தனியார் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “அல்மோரா மாவட்டத்தின் சிதலாகெட் பகுதியில் கருகிய பறவைகளின் சடலங்களை கண்டேன். மேலும் பல வெளிநாட்டு பறவைகள் இன உற்பத்திக்காக இப்பகுதியில் கூடியுள்ளதால், அப்பறவைகளின் கூடுகள் அழியும் நிலை உருவாகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இவரை தவிர, சஞ்சீவ் சதுர்வேதி காடுகளின் பாதுகாவலர் ஒருவர் இதுபற்றி பேசும்பொழுது, “ஆபத்தான மஞ்சள் தலை ஆமையின் கதி குறித்து நாங்கள் கவலை அடைகிறோம். ஏனெனில் இந்த ஆமைகள் உலர்ந்த சால் இலைகளின் கீழ்ப்பகுதியை தனது இருப்பிடமாகக் கொண்டு வாழக்கூடியது. இத்தகைய காட்டுதீயினால் இந்த வகை ஆமைகள் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றன. ஏற்கெனவே அவை எண்ணிக்கையில் குறைந்த அளவே இருப்பதால் தற்போது அவை அழியும் நிலையில் உள்ளன” என கவலை தெரிவித்திருக்கிறார்.

காட்டில் ஏற்பட்ட தீ விபத்து
“நிலவில் மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தி உள்ளோம்” - இஸ்ரோ

உத்தரகாண்ட் காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள்:

  • 65 வயதான சாவித்ரி தேவி என்ற பெண், காடுகளில் புற்களை சேகரிக்க செல்கையில் காட்டுதீயில் சிக்கிக்கொண்டார். அங்கிருந்து உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

  • தீயை அணைக்கச்சென்ற பிசின் தொழிற்சாலை தொழிலாளர்கள் மூன்று பேர் மற்றும் ஒரு பெண் உட்பட நான்கு பேர் காட்டுத் தீயில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது.

  • மேலும் இக்காட்டுத்தீயினால் சுவாச கோளாறுகள் ஏற்படுவதால் அப்பகுதியை சுற்றி இருக்கும் மக்கள் முகக்கவசம் அணிந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

  • எனினும் இப்பகுதியில் மே மாதம் 8,9 தேதிகள் மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை தகவல் தெரிவித்துள்ளதால், மழையை எதிர்நோக்கி அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com