"அதானி, அம்பானி குறித்து ராகுல் பேசாதது ஏன்?".. கேள்வியெழுப்பிய பிரதமர்.. பதிலடிகொடுத்த பிரியங்கா!

அதானி, அம்பானி குறித்து தற்போது ராகுல் காந்தி பேசுவதில்லை” எனக் கூறிய பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரியங்கா, ராகுல், மோடி
பிரியங்கா, ராகுல், மோடிட்விட்டர்

7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் திருவிழாவில், மூன்றுகட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து, 4வது கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நாளில்தான் தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக, அங்கு தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

எம்.பி.ராகுல் காந்தி - பிரதமர் மோடி
எம்.பி.ராகுல் காந்தி - பிரதமர் மோடிஃபேஸ்புக்

அந்த வகையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ராகுல் காந்தி 5 இளவரசர்களைப் பற்றி எப்போதும் பேசுவார், தொடர்ந்து அதானி, அம்பானி குறித்து பேசி வந்த ராகுல் காந்தி தற்போது அமைதியாக உள்ளார். தேர்தல் அறிவித்தபிறகு ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் அதானி, அம்பானி குறித்து பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.

அம்பானி, அதானி
அம்பானி, அதானிட்விட்டர்

அதானி, அம்பானியிடம் இருந்து எவ்வளவு கறுப்புப் பணத்தை வாங்கினீர்கள்? மக்களவைத் தேர்தலுக்காக எவ்வளவு நன்கொடை பெற்றீர்கள்? 5 ஆண்டுகளாக விமர்சித்து வந்தவர்கள் ஒரே இரவில் அமைதி காப்பது ஏன்? ஏதோ தவறாக நடப்பதை நான் அறிகிறேன். நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்” என ராகுலையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: குஜராத்| வாக்குச்சாவடியைக் கைப்பற்றி இணையத்தில் வைரலாக்கிய பாஜக எம்பி மகன்.. #ViralVideo

பிரியங்கா, ராகுல், மோடி
“பிரதமர் மோடியின் ஆன்மா அதானி வசம் இருக்கிறது” - ராகுல் காந்தி விமர்சனம்

இந்த நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர், ”அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரைக்கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்.

மோடி, பிரியங்கா காந்தி
மோடி, பிரியங்கா காந்திட்விட்டர்

பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் விவசாயிகளுக்கு 1 ரூபாய்கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெற்றார் மாயாவதி! பின்னணி என்ன?

பிரியங்கா, ராகுல், மோடி
“விமானி இல்லாமல்கூட மோடி போவார்.. ஆனால் அதானி இல்லாமல் போக மாட்டார்”-உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com