திருத்தணி: திடீரென்று வந்த மூச்சுத்திணறல்.. கோவில் படி ஏறும்பொழுது பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருத்தணி கோவிலுக்கு சென்ற பக்தர் படி ஏறும் பொழுது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
திருத்தணி
திருத்தணிPT

திருத்தணி முருகன் கோயில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் படியேறி வரும் பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயில் இன்று கிருத்திகை தினம் என்பதால் அண்டை மாநிலம் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து சாமி தரிசனம் செய்ய வருகை தந்து உள்ளனர்.

திருத்தணி
உத்தரகாண்ட் | குப்பையை கொளுத்தப்போய் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ.. அழிவின் விளிம்பில் உயிர்கள்!

இதனால் மலைக்கோயில் முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வரிசையில் திரண்டு உள்ளனர். இந்த நிலையில் சென்னை அருகில் உள்ள சோழவரத்தைச் சேர்ந்த முத்து என்பவர் தனது மனைவி ராதிகா மற்றும் உறவினர்கள் அனைவருடன் இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு ஒரு வேனில் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு வந்தார். அவர் முருகன் மலைக்கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக சாமி தரிசனத்திற்கு நடந்தேறினார். திடீரென்று மூச்சு திணறி மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்தால் உடனடியாக அருகில் இருந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸருக்கு தகவல் அளித்தனர்.

108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து சோதனை செய்தபோது அவர் உயிர் நாடி துடிப்பு இல்லை என்று கூறியுள்ளனர். மேலும் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று மருத்துவர்கள் சோதித்துள்ளனர். அப்போது முத்து ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர் இதனால் இறந்து போன முத்துவின் உடலை சோழவாரத்திற்கு அவருக்கு உறவினர்கள் எடுத்துச் சென்றனர். சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com