நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்தவாரம் அதிகம் பார்க்கப்பட்டப் படங்களின் பட்டியலில் நானியின் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உலகளவில் மூன்றாவது இடத்தையும் இந்தியப் படங்களில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
நானி - சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் நடிப்பில் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியான‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி ஒரு மாதம் ஆனபிறகு கடந்த 21 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி சமூக வலைதளங்கள் முழுக்க பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. குறிப்பாக, தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தினை ராகுல் சங்ரிதியன் இயக்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்டப் படங்களில் ’ஷ்யாம் சிங்கா ராய்’ உலகளவில் மூன்றாவது இடத்தினையும் இந்திய அளவில் முதலிடத்தினையும் பிடித்துள்ளது. அதுவும், வெளியான மூன்றே நாட்களில் மூன்றாவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சூறைக்காற்றால் குளிரும் டெல்லி! விமான சேவைகள் பாதிப்பு
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்