[X] Close

விமானத்தின் தரையிறக்கும் கியரில் சிக்கியிருந்த கால்பந்தாட்ட வீரரின் உடல் - ஆப்கனில் துயரம்

உலகம்

Former-Afghan-footballer-dies-in-landing-gear-of-US-plane-while-trying-to-flee-Kabul

ஆப்கானிஸ்தான் இளைஞர் கால்பந்து அணியின்  வீரர் ஜகி அன்வரி காபூலில் இருந்து தப்பிக்க முயன்றபோது அமெரிக்க விமானத்தின் தரையிறங்கும் கருவியில் சிக்கி உயிரிழந்தார்.


Advertisement

தேசிய இளைஞர் அணிக்காக விளையாடிய 19 வயதான ஜகி அன்வரியின் உடல் பாகங்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர் பாபக் தக்வேய் கூறுகையில், “அமெரிக்காவின் C-17A  விமானத்தின் தரையிறங்கும் கியரை பிடித்து காபூலை விட்டு வெளியேற முயன்ற இளைஞர்களில் ஜகி அன்வரியும் ஒருவர். இவர் ஆப்கானிஸ்தானின் தேசிய இளைஞர் கால்பந்து அணியின் வீரர்என தெரிவித்தார்.

முன்னதாக அன்வரியின் உடல் தரையிறங்கும் கியரில் சிக்கி இருந்ததால், காபூலை விட்டு புறப்பட்ட விமானம் அவசரமாக கத்தாரில் தரையிறங்கியது. திறமையான கால்பந்து வீரரான அன்வரிக்கு நண்பர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


Advertisement

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், முக்கிய நகரங்களை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள், கடந்த 15-ம் தேதி தலைநகர் காபூலை பிடித்து இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை தங்கள் வசம் கொண்டுவந்தனர். இதையடுத்து, ஆப்கான் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்தனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த விமானத்தில் இருந்த விமானத்தில் ஏறுவதற்கு எல்லோரும் பெருங்கூட்டமாக உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முண்டியடித்துச் சென்றனர். அந்தக் காட்சிகளே பார்ப்பதற்கு மனதை உலுக்கும் வகையில் இருந்தது. அப்போது கூடுமானவரை ஆட்களை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டது. அந்த விமானம். ஆனால், விமானத்தில் இடம் கிடைக்காததால் அதன் மீது தொங்கியபடி சிலர் செல்ல முயற்சித்தனர். அதில் சிலர் கீழே விழுந்து உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசல், அதனை கலைக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் விமான சக்கரங்களில் பயணித்து கீழே விழுந்தவர்கள் என நான்கு நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close