[X] Close

திருமணத்தை மீறிய உறவு: மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது

Subscribe
Extramarital-affair-Killing-wife-The-playful-husband-was-arrested

திருமணத்தை மீறிய உறவு விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.


Advertisement

கர்நாடக மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்கள் இருவரும் கடந்த வாரம் ஒசூரில் நடைப்பெற்ற திருவிழாவில் பங்கேற்க ஒசூர் மாநகராட்சி சுண்ணாம்பு தெரு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.

image


Advertisement

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் பிரவீன்குமார், சாந்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், மனைவிக்கு உடம்பு சரியில்லை என நண்பரிடம் கூறி ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சாந்தாவின் ஊரான கோலார் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரின் பெற்றோரிடம் சாந்தா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறி உடலை கொடுத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார்.

கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சாந்தாவிற்கு காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் மீண்டும் உடலை ஒசூருக்கு எடுத்து வந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட ஒசூர் நகர போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image


Advertisement

இதையடுத்து தலைமறைவாகி இருந்த பிரவீன்குமாரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் பிரவீன்குமார், தனது மனைவி சாந்தாவை கொலை செய்தது தெரியவந்துள்ளது. பிரவீன்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் இருந்த திருமணத்தை மீறிய உறவு வசாந்தாவிற்கு தெரிந்ததும் அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. பிரவீன்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close