[X] Close >

திருப்பூர்: முயல் வேட்டைக்குபோன இடத்தில் குறி தவறி நண்பர் மீது பாய்ந்த குண்டு

Tiruppur-A-bomb-was-hurled-at-a-friend-while-he-was-on-a-rabbit-hunt

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள நியூ திருப்பூர் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் ஏர்-கன் (வேட்டை துப்பாக்கி) கொண்டு முயல் வேட்டைக்குச் சென்ற மூன்று நண்பர்கள், முயலை சுடும்போது தவறுதலாக ஒருவரது தோல் மீது குண்டு பாய்ந்து காயமடைந்தார்.


Advertisement

image


திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்துள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (29). இவர், நியூ திருப்பூர் அருகிலுள்ள வேலூர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (20) மற்றும் ஒரு நண்பர் என மூன்று பேரும் நேற்று நள்ளிரவிற்கு மேல் நியூ திருப்பூருக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.


Advertisement

அப்போது முருகேசன் மற்றும் மகேந்திரனின் நண்பர் வேட்டைக்கு பயன்படுத்தும் ஏர்-கன் எனப்படும் வேட்டை துப்பாக்கியை கொண்டுவந்துள்ளார். மூவரும் இன்று அதிகாலை முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு முருகேசனின் தோல் மீது பாய்ந்தது. இதனால் பயந்துபோன மகேந்திரன் மற்றும் மற்றொரு நண்பர் என இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

image


இதுகுறித்து தகவல் அறிந்த முருகேசனின் உறவினர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவான மகேந்திரன் மற்றும் அடையாளம் தெரியாத நண்பர் என இருவரையும் தேடிவருகின்றனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close