ஜப்பான் நாடாளுமன்றம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஜப்பானின் மிகவும் சக்திவாய்ந்த கீழ் சபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் இன்று நிறைவேற்றப்பட்டதால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நோய்த்தடுப்பு மருந்துகளை நிர்வகிக்கும் பொறுப்பை உள்ளூர் அரசாங்கங்கள் ஏற்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் பாதியில் நாட்டு மக்களுக்கு போதுமான அளவு தடுப்பூசிகளை பெறமுடியும் என்று ஜப்பான் பிரதமர் யோசிஹைட் சுகா உறுதியளித்துள்ளார். இது நாட்டின் மோசமான தொற்றுநோயுடன் போராடுகையில், கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய திட்டத்தை வழங்குகிறது என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது
தடுப்பூசிகளிலிருந்து உருவாகும் சுகாதாரப் பிரச்சினைகளால் ஏற்படும் எந்தவொரு இழப்பிற்கும் தனியார் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க இந்த மசோதா அரசாங்கத்தை அனுமதிக்கிறது. தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் அரசு மாடர்னா இன்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது,
மேலும் அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி மற்றும் ஃபைசர் இன்க் ஆகியவற்றுடன் அடிப்படை ஒப்பந்தங்களையும் செய்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கதொடங்கியதிலிருந்து ஜப்பானில் மொத்தம் 2,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்