[X] Close

இந்தோனேசியாவில் இரு முறை பயங்கர நிலநடுக்கம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தோனேசிய நாட்டின் இரு வேறு இடங்களில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும் நல் வாய்ப்பாக அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் இதுவரை கொடுக்கப்படவில்லை.


Advertisement

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 5.23 மணிக்கு 6 நிமிட இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் முதல் முறை ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்றும் இரண்டாம் முறை 6.9 என பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுனாமி வருமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் இந்த நடுக்கத்தால் இந்திய பெருங்கடலில் இருக்கும் நாடுகளுக்கு சுனாமி வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

மேலும் இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. கடைசியாக 2018 இல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் சுனாமியில் 4300 பேர் வரை உயிரிழந்தனர். அப்போது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்தது. அதற்கும் முன்பாக 2004 ஆம் ஆண்டு ரிக்டர் அளவு கோலில் 9.5 என பதிவான நில நடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது.

image

இதில் இந்தியா உள்பட இந்தியப் பெருங்கடலில் இருக்கும் நாடுகளைச் சேர்ந்த 2,20,000 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் மட்டும் 1,70,000 பேர் சுனாமி பேரலைக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement