JUST IN
  • BREAKING-NEWS ‌சிஏஏவுக்கு எதிராக சென்னையில் பேரணி நடத்திய இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் உள்ளிட்ட 20ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ‌இந்தியன் 2, படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS ‌திருப்பூர், சேலம் மாவட்டங்களில் நடைபெற்ற இருவேறு சாலை‌ விபத்துகளில் 25 பேர் பலி

‘மாறா’ படப்பிடிப்பை தொடங்கிய மாதவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் மாதவன் ‘மாறா’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் மாதவன் தனது 'மாறா' படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். இப்படத்தினை அறிமுக இயக்குநர் திலீப் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘கல்கி’ என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுத்திருந்தார். இப்போது ‘மாறா’ திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராகியுள்ளார். இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ‘விக்ரம் வேதா’வில் நடித்திருந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘சார்லி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘மாறா’. இந்தப் படம் மலையாளத்தில் விமர்சன ரீதியாக மிகவும் பாராட்டப்பட்டது. இதில் துல்கர் மற்றும் பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர்.

image

‘மாறா’ முற்றிலும் காதல் மையமாக கொண்ட கதை. இந்தக் கதையில் மாதவனுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி சேர்வதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் மாதவன் நேரடியாக காதல் கதையில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார். யூடியூப் தளத்தில் பெரிய ரசிகர்களைக் கொண்டிருக்கும் அலெக்சாண்டர் பாபு காமெடியனாக நடிக்க இருக்கிறார். இவருடன் மெளலியும் நடிக்கின்றார்.

மாதவன் இதுவரை ‘ராக்கெட்ரி’ மற்றும் ‘சைலன்ஸ்’ ஆகிய படங்களில் பிசியாக இருந்ததால் கடந்த ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. சிறிய பகுதி மட்டும் எடுத்துவிட்டால் படம் முழுமை அடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. 

Advertisement: