அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் இந்தியா வெற்றி வரை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடைசி சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமாருக்‌கு கார் பரிசு. சிறந்த காளையாக தேர்வான கருப்பன் காளை உரிமையாளரும் காரை பரிசாக பெற்றார்.


Advertisement

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணும் பொங்கல் உற்சாகக் கொண்டாட்டம். சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா த‌லங்களில் குவிந்த மக்கள்.

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் புதிய உத்தரவு. குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.


Advertisement

Image result for நிர்பயா

மத்திய அமைச்சர்கள் 36 பேர் இன்று முதல் 23ஆம் தேதி வரை காஷ்மீர் பயணம். மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்குமாறு பிரதமர் மோடி அறிவுரை.

எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட அல் உம்மாவை சேர்ந்த மெகபூப் பாஷா கைது. ஏற்கெனவே கைதானவர் அளித்த தகவலின் பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை.


Advertisement

பெரியாரை பற்றி நடிகர் ரஜினி அவதூறாக பேசியதாக திராவிடர் கழகத்தினர் குற்றச்சாட்டு. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையிடம் புகார் மனு.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலை.

loading...

Advertisement

Advertisement

Advertisement