மாயாவதி - சோனியா இன்று சந்திப்பு இல்லை: பகுஜன் சமாஜ் கட்சி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்தியில் பாஜக அல்லாத அரசை அமைப்பதில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்க சந்திரபாபு நாயுடு முயற்சி செய்து வருகிறார். 


Advertisement

இதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்‌சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 


Advertisement

இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் ராகுல் காந்தியை சந்தித்து சந்திரபாபு நாயுடு நேற்று ஆலோசனை நடத்தினார். இறுதியாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி சந்தித்தார். 

இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சோனியா காந்தி உடனான மாயாவதி சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று சோனியா காந்தியை, மாயாவதி சந்திக்கவில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மாயாவதிக்கு எந்த நிகழ்ச்சியோ, சந்திப்போ இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement