மூலக்கொத்தளத்தால் மோதல்: முறுக்கிக்கொண்ட ஜெயக்குமார், வைகோ!

MDMK-Secretary-Vaiko-and-Minister-Jayakumar-Fight-for--Moolakothalam-Cemetery-Issue

சென்னை மூலக்கொத்தளம் சுடுகாடு அருகே அரசால் கட்டப்படும் குடியிருப்புகளால் மதிமுகவினருக்கும், அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் என்று கூறப்படுபவர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது.


Advertisement

சென்னை மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடங்கள் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டின் ஒரு பகுதியை அகற்றி, அதில் 1044 குடியிருப்புகள் கட்ட அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. இதற்கு மதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வைகோ நேரில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால் சட்டப்பேரவை நடந்த போது மூலகொத்தளம் சுடுகாட்டிற்கும், தற்போது கட்டப்பட உள்ள குடியிருப்பிற்கும் 0.58 ஏக்கர் இடைவெளி உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.


Advertisement

இந்நிலையில் மதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூலக்கொத்தளம் சுடுகாடு அகற்றப்பட வேண்டும் என்றும் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தை சுமார் 10 பேர் முற்றுகையிட வந்தனர். அப்போது தாயகத்தில் நடந்த மாணவரணி கூட்டத்தில் வைகோ பங்கேற்றிருந்தார். இதையடுத்து முற்றுகையிட வந்தவர்களுக்கும், மதிமுக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முடிவில் முற்றுகையிட வந்தவர்களை மதிமுகவினர் அடித்து விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து கூறிய மதிமுகவினர், அமைச்சர் ஜெயக்குமார் ஏவுதலின்படியே முற்றுகையிட்டவர்கள் வந்ததாக குற்றம்சாட்டினர்.
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement