JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
தமிழ்நாடு 29 Jul, 2016 03:23 PM

மாநிலத்திற்கு கூடுதலாக ரூ. 2600 கோடி நிதிச்சுமை.... ஓ.பன்னீர்செல்வம்

மத்திய -மாநில அரசுகளிடையே நிதிப் பகிர்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மாநிலங்களின் சுமையை அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்புக்கு மத்தியில் சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்தார். ‌ கடந்த 3 ஆண்டுகளில் வரிவருவாய் கணிப்பிற்கும் கணக்கிற்கும் ஏற்பட்ட வேறுபாட்டிற்கு காரணம் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட விலை மாற்றம் மற்றும் பொருளாதார மந்தநிலை தான் என அவர் கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளில் வரி வருவாய் 57.6 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டதாகவும் ஆனால் 47. 28 ஆயிரம் கோடி மட்டுமே வரி வருவாய் கிடைத்ததாகவும் தெரிவித்தார். இதேபோல், கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருப்பதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வருவாயை விட செலவினங்கள் அதிகரித்துவிட்டதால் பற்றாக்குறையை தடுக்கமுடியவில்லை என அவர் குறிப்பிட்டார். அரசின் கடன் சுமை அதிகரித்திருப்பதை நியாயப்படுத்த விரும்பவில்லை என கூறிய பன்னீர்செல்வம் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் கடன்சுமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார். மத்திய அரசு மாநிலத்திற்கு தரவேண்டிய நிதி பகிர்வு முறையில் பல மாற்றங்களால் மாநிலத்திற்கு கூடுதலாக 2600 கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads