[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

காமராஜர் கட்டிய அணையைக் காக்க நிதியளித்த மாணவர்கள்

student-donate-money-to-save-dam

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காமராஜர் கட்டிய அணையைக் காக்க தங்களது சேமிப்பு தொகையை வழங்கி, மாணவர்கள் அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.

ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க அக்கிராமத்து இளைஞர்கள் சொந்த செலவில் நீர்நிலைகளை தூர்வாரி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக அம்புலி ஆற்றில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு, தற்போது பராமரிப்பின்றி உள்ள அணையையும் சீரமைத்து வருகின்றனர்.

இதற்காக பல்வேறு தரப்பினரும், ஆதரவுக் கரம் நீட்டி பண உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், கொத்தமங்கலம் மேற்கில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், தங்கள் உண்டியல் சேமிப்புத் தொகையான பத்தாயிரம் ரூபாயை அணையை தூர்வாரும் பணிக்காக அளித்தனர்.

கொத்தமங்கலத்தில் நீர்நிலைகளை தூர்வாரும் இளைஞர் அமைப்பினர், கடந்த 70 நாட்களில் அம்புலியாறு அணைக்கட்டு, பெரியகுளம், கொடிக்குளம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை தூர்வாரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close