[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

“கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடுக”- ஸ்டாலின் வலியுறுத்தல்

mk-stalin-demand-both-government-to-with-draw-about-nuclear-waste-project

கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டும் முடிவை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டுவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறானது எனத் தெரிவித்துள்ளார். அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டுவது தொடர்பாக ஜூலை 10-ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டி மக்களின் உயிரை சோதனைக்கூட பொருள்களாக்க மத்திய - மாநில அரசுகள்
முயற்சிக்கின்றனவோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் திமுகவின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று மக்களின் அச்சத்தையும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் அழுத்தமாக பதிவு செய்வார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கையை நினைவில் கொண்டு கூடங்குளம் அணு உலை வளாகத்திற்குள் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக கைவிடுவதுடன் அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close