[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

பாஜகவுடன் பேசிவருகிறது திமுக: தமிழிசை தகவல்

dmk-discuss-with-bjp-tamilisai

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவுடனும் பேசிக்கொண்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை திரட்டி 3-வது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இதுதொடர்பாக அவர் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். சமீபத்தில்  கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தார். இந்நிலையில் அவர், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. 

இந்நிலையில் திமுக, பாஜவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக, பாரதிய ஜனதா கட்சியுடனும் பேசி வருகிறதா? என்று கேட்டபோது, ’’அது உண்மைதான்’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’ஒரு பக்கம் ராகுல் காந்தி, மற்றொரு பக்கம் சந்திரசேகர் ராவ். இன்னொரு பக்கம் மோடி. திமுகதான் நிறம் மாறும் என்பது எல்லோருக்கும் தெரியுமே?’’ என்றார். அவர்கள் யார் மூலம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பது பற்றி கேட்டபோது, யார் மூலமோ பேசுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close