[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

தலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..!

thousand-of-man-escaped-from-village

போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து பீதியில் கிராமத்திலுள்ள ஆண்கள் தலைமறைவாவது தொடர்கதையாகி வருகிறது.

சென்னையைச்‌ சேர்ந்த ருக்மணி என்ற மூதாட்டி குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே அத்திமூரிலுள்ள குலதெய்வ கோயிலுக்குச் கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார். அங்கே குடும்பத்துடன் அவர்கள் நின்றுகொண்டிருந்த போது, கிராமத்தின் தெருவில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்துள்ளன. அந்தக் குழந்தைகளை கண்ட மூதாட்டி, குழந்தைகளை அழைத்து சாக்லெட் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், ருக்மணி குடும்பத்தினரை குழந்தை கடத்தும் கும்பலோ என்று சந்தேகித்துள்ளது.

அதற்குள் கூட்டம் கூட, சந்தேகமடைந்த ஊர்மக்கள், ருக்மணி குடும்பத்தினர் 5 பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். வலியால் அவர்கள் துடிக்க, ருக்மணி தாங்கள் குழந்தை கடத்தும் கும்பல் இல்லை என்பதை கூறியுள்ளார். இருப்பினும் கடுமையாக நிகழ்த்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை கடத்தல்காரர்கள் என அவர்களை நினைத்து ஊர்மக்கள் தாக்கினர். ஆனால் உண்மையில் அவர்கள் குழந்தை கடத்தல்காரர்களே இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

இதனிடையே ருக்மணி கொலை வழக்கு குறித்து, அத்திமூர், திண்டிவனம், களியம், தம்பு கொட்டான் பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 44 பேரை போலீசார் இதுவரையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன்காரணமாக  7 கிராமங்களை சேர்ந்த, 2000-க்கும் மேற்பட்ட ஆண்கள் தலைமறைவாகி உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- “சம்பவம் நடந்த இடத்தில் சேகரித்த வீடியோ காட்சிகளை வைத்துதான் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதன்படிதான் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது  நீதிமன்ற வழக்கு தொடர முடியாத காரணத்தால், யாரையும் கைது செய்ய மாட்டோம் என அறிவித்தும், கிராமங்களிலுள்ள பெரும்பாலான ஆண்கள் தலைமறைவாகவே உள்ளனர். இதனால் கிராமங்கள் தொடர்ந்து சகஜ நிலைக்கு திரும்பாமல் வெறிச்சோடி காணப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close