[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

ஹெச்.ராஜா, நித்யானந்தா சீடர்கள் மீது போலீசில் புகார்

compliant-filed-against-hraja-and-nithyananda-disciples

ஹெச்.ராஜா, நித்யானந்தா சீடர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கக் கோரி தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், “சகோதரத்துவம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாழ்ந்துவரும் மக்களிடம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசி வருகிறார். சமுதயாத்தில் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கிற கவிஞர் வைரமுத்துவை கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி வருகிறார். இது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல. அவரின் செயல்பாடுகள் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்து வருகிறது. இதனால் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், ஆண்டாள் விவகாரத்தில் சமூக வலைதளத்தில் ஆபாசமாக அரசியல் கட்சி தலைவர்களை விமர்சித்து வரும் நித்தியானந்தா சீடர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close