[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ஒரே நதிநீர் ஆணையம்: மத்திய அரசின் முயற்சிக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

stalin-s-opposition-to-the-efforts-of-the-federal-government

அனைத்து மாநிலங்களுக்குமான ஒரே நதிநீர் ஆணையம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஒரே நதி நீர் ஆணையம் அமைக்கும் முயற்சி ஏற்கனவே காவேரி நீர் கிடைக்காமல் வாடும் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை மேலும் தாமதப்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை தீர்க்க ஒரே நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

காவிரி இறுதி தீர்ப்பை நிறைவேற்ற 4 நாட்களில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றாமல் இருப்பதுடன், அந்தத் தீர்ப்பை எதிர்த்து தடை வாங்கி விட்டதால் தமிழகத்தின் உரிமை அநியாயமாக மறுக்கப்பப்படுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பைப் புறக்கணிக்கும் வகையில், அனைத்து நதிநீர் பிரச்சனைகளுக்கும் ஒரே நதி நீர் ஆணையம் அமைக்கப் போவதாக மத்திய அரசு கூறுவதன் மூலம், தமிழகத்திற்கு, கிடைக்க வேண்டிய நீதி மிகவும் தாமதமாகக் கூடிய அபாயம் இருப்பதாகவும் இந்த நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறதோ எனத் தோன்றுவதாகவும் ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நதிநீர் ஆணையம் என்ற யோசனையுடன் காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பினை சிறிதும் தொடர்புபடுத்தாமல், காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசு, காவிரி விவகாரத்தில் நியாயம் கிடைக்க மத்திய அரசிற்கு அழுத்தம் தருவதுடன் உச்ச நீதிமன்றம் வழியாகவும் முயற்சிக்க வேண்டுமென என ஸ்டாலின் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close