[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

இன்று, முதல் டி20: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதல்!

india-vs-west-indies-unsettled-india-start-rebuilding-in-florida

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி இன்று பங்கேற்கிறது.

இந்தியா கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதல் 2 டி-20 போட்டிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டி இன்று நடக்கிறது. உலகக் கோப்பைக்கு பிறகு விராத் கோலி தலைமை யில் இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது.

கேப்டன் கோலிக்கும் துணை கேப்டன் ரோகித்தும் பிரச்னை என்று கூறப்படும் நிலையில் இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

இந்திய அணியில், நவ்தீப் சைனி, ராகுல் சாஹர், தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், குணால் பாண்ட்யா ஆகிய இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். தோனி இல்லாத நிலையில், ரிஷப் பன்டுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித், ஷிகர் தவான், விராத் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் வழக்கம் போல முதல் நான்கு இடங்களில் களமிறங்குகின்றனர்.

பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில், அதிரடி வீரர்கள் பொல்லார்ட்,  சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆகியோர் திரும்பி உள்ளனர். இதற்கிடையே, ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், காயம் காரணமாக, இந்தியாவுடனான முதல் 2 டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜாசன் முகமது சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close