[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

பந்துவீசி பயிற்சி எடுத்த தோனி - ரஸ்ஸலை வீழ்த்த திட்டமா?

csk-captain-dhoni-taking-bowl-practise

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.  

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்துவீச தீர்மானித்தார். இரு அணிகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடங்களில் உள்ளதால், போட்டியில் பரபரப்பு இருக்கும்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 ரன் எடுப்பதற்கு 3 விக்கெட் இழந்தது. லின், ரானா டக் அவுட் ஆக, நரைன் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த உத்தப்பா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை சாஹர் ஓவரில் அடித்தார். ஆனால், அதே ஓவரில் கேதர் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் தினேஷ் கார்த்திக் சற்று நேரம் நிலைத்து நின்று ஆடினார். 3 பவுண்டரிகளையும் அடித்தார். ஆனால், 19 ரன்னில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். சுப்மன் கில்லும் 9 ரன்னில் நடையை கட்டினார்.  கொல்கத்தா அணி 47 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. சாஹர் மூன்று விக்கெட் சாய்த்தார். இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட் சாய்த்தார். ஹர்பஜன் ஒரு விக்கெட் எடுத்தார்.

             

இதனிடையே, போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீசுவது போன்ற வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை தோனி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறது.

     

தோனி பந்துவீசுவது குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ரஸ்ஸலை ஆட்டமிழக்கவே தோனி இப்படி பயிற்சி எடுக்கிறார் என்று ஒரு நெட்டிசன் கூறியிருக்கிறார். 

         

அதிலும், தோனி கோட்டை தாண்டி காலை வைத்து பந்துவீசியதை கவனித்த ஒருவர், இது நோ பால் ப்ரீ ஹிர் உண்டு என்று கமெண்ட் செய்துள்ளார்.

            

கொல்கத்தா அணி ஏற்கனவே 6 விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், ரஸ்ஸல் தற்போது பேட்டிங் செய்து வருகிறார்.

 

வீடியோ

Advertisement:
Related Tags : CSKDhoniIplதோனிஐபிஎல்சிஎஸ்கே
Advertisement:
Advertisement:

[X] Close