[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் தேர்வு
  • BREAKING-NEWS பி.இ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 2 வரை அவகாசம் நீட்டிப்பு- அண்ணா பல்கலைக்கழகம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியை தவிர்த்த மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை முடக்கியது ஏன்?- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதலமைச்சர் குமாரசாமி
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே புதுமண தம்பதியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சாலை மறியல்
  • BREAKING-NEWS தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் கேரள அரசுப்பேருந்துகள் நிறுத்தம்
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்- தமிழக அரசு

3-வது போட்டி: காயத்தில் தவிக்கும் தென்னாப்பிரிக்கா, ஆட்களை மாற்றாத இந்தியா

india-vs-south-africa-3rd-one-day-tomorrow

இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நாளை நடக்கிறது. 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி, தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இதற்கிடையே இரு அணிகள் இடையேயான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, கேப்டவுனில் நாளை நடக்கிறது.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி காயப் பிரச்னையில் சிக்கி இருக்கிறது. காயம் காரணமாக, முதலில் டிவில்லியர்ஸ் விலகினார். பிறகு கேப்டன் டுபிளிசிஸ் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, தொடரில் இருந்து விலகினார். இப்போது விக்கெட் கீப்பர் குயிண்டென் டி காக்கும் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அந்த அணி சிக்கலில் சிக்கியுள்ளது. 
இந்திய அணியை பொறுத்தவரை மாற்றம் எதுவுமில்லை. முந்தைய 2 போட்டிகளில் இடம்பெற்ற வீரர்களே இந்தப் போட்டியிலும் களமிறங்க உள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close