[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் குடும்பப் பிரச்னையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக்கொலை
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்

85% ஒதுக்கீடும் ரத்து....மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் கதி என்ன?

85-reservation-cacelled-whats-is-the-condition-of-tn-state-syllabus-students

மருத்துவ படிப்பில் சேர, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் 85 சதவிகித இடங்களை வழங்கும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு, அதில் தோல்வி கண்ட தமிழக அரசு மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 85 சதவிகித இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 15 சதவிகித இடங்களை சி.பி.எஸ்.இ உள்ளிட்ட இதர பாடத்திட்ட மாணவர்களுக்கும் ஒதுக்கியும் அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையையும் தற்போது உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. இந்த ரத்து மாநிலப் பாடத்திட்ட மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என சில கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநிலப் பாடத்திட்டத்தில் 4 லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் உயிரியல் தேர்வெழுதியுள்ளனர். சி.பி.எஸ்.இ-யில் உயிரியல் பிரிவில் 4 ஆயிரத்து 300 பேர்தான் உள்ளனர். இதனை கணக்கில் கொண்டே உள் ஒதுக்கீட்டு வழங்க அரசாணை வெளியானது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டது நீட் போன்ற தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக வேண்டிய கட்டாய சூழலை உருவாக்கியுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என துறை சார்ந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, உள் ஒதுக்கீட்டு கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும் என்றும், அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாமதமாகி உள்ள மருத்துவக் கலந்தாய்வை விதிகளும், அது சார்ந்த வழக்குகளும் மேலும் மேலும் தாமதமாக்கி வருகின்றன. இதனால் குழப்பதில் ஆழந்துள்ளனர் மாணவர்கள்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close