[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஆண்ட்ராய்டு டிவி ஆப்பை அறிமுகப்படுத்திய டுவிட்டர் நிறுவனம்...!

twitter-introduced-android-tv-app

பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர், அதன் பயனாளர்களுக்கு ஆண்ட்ராய்டு டிவி ஆப் என்ற புதிய ஆப்பை வழங்கியுள்ளது.

டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்யப்படும் செய்திகளை பார்ப்பதோடு, தற்போது நேரடி ஒளிபரப்புகளையும் காணக்கூடிய ஆண்ட்ராய்டு டிவி ஆப் பயன்பாட்டை டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. பல ஆய்வு சோதனைகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்த ஆப் மூலம் தேசிய கால்பந்து லீக் (NFL) மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களை நாம் காணலாம். இந்த நேரடி ஒளிபரப்புகளை காண பயனாளர்களுக்கு டுவிட்டர் கணக்கு வேண்டும் என்பது அவசியம் இல்லை. மேலும் டுவிட்டரின் இந்த ஆண்ட்ராய்டு டிவி ஆப் லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோக்கள் மற்றும் ட்வீட் வீடியோ கிளிப்புகளை காண உதவுகிறது. விரைவில் ஆண்ட்ராய்டு டிவி ஆப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என டுவிட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close