[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

“அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம்” - கவுதம் காம்பீர் மீது வழக்குப் பதிவு

ec-censures-gautam-gambhir-for-holding-rally-without-permission-case-filed

அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக கவுதம் காம்பீர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. டெல்லியிலுள்ள 7 தொகுதிகளுக்கு மே 12ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்காக, ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காம்பீரும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ஏப்ரல் 25ம் தேதி டெல்லியின் ஜங்க்புரா பகுதியில் கவுதம் காம்பீர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால், காம்பீர் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அனுமதியின்றி தேர்தல் பிரச்சார கூட்டம் நடத்திய புகாரில் காம்பீர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அனுமதியின்றி பிரச்சார கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் காம்பீருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

                 

அத்துடன், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்துள்ளதாக காம்பீர் மீது ஆம் ஆத்மி வேட்பாளர் அடிஷி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் 22ம் தேதி பாஜகவில் இணைந்த காம்பீருக்கு உடனடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. டெல்லி வேட்பாளர்களிலே காம்பீருக்கு சொத்து மதிப்பு அதிகம். அவருடைய சொத்து மதிப்பு ரூ147 கோடி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close