[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

‘தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சுவார்த்தை’ குழுக்களை அறிவித்தது திமுக

dmk-announced-the-teams-for-preparing-election-manifesto-and-alliance-talk

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயார் செய்வதற்கும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்குமான குழுக்களை திமுக அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவிக் காலம் வருகின்ற மே மாதத்துடன் நிறைவடைகின்றது. இதனையடுத்து, ஏப்ரல் மே மாதங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளையும் முழுவீச்சில் செய்து வருகின்றது. அதேபோல், அரசியல் கட்சிகளும்  நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. குறிப்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. 

              

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை தயார் செய்வதற்கும், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்குமான குழுக்களை திமுக அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையை தயார் செய்ய கட்சியின் முதன்மை பொதுச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுக மாநிலங்களவைக் குழு தலைவர் கனிமொழி, கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. 

                 

அதேபோல், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவில், கழகப் பொருளாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

                  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close