[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

காஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை!

kashmir-postpaid-mobile-phone-services-to-resume-from-today

காஷ்மீரில் செல்போன் சேவை இன்று மீண்டும் வழங்கப்பட இருக்கிறது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு கருதி, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொலைபேசி, செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. இப்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதால் இந்த சேவைகள் படிப்படியாகத் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன. ஜம்மு பகுதியில் மட்டுமே இந்தச் சேவைகள் முற்றிலும் வழங்கப்பட்டிருந்தன. காஷ்மீரில், தொலைபேசி இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு மேல், போஸ்ட்பெய்ட் செல்போன் சேவைகள் வழங்கப்பட இருக்கிறது.  இத்தகவலை, மாநில அரசின் செய்தி தொடர்பாளரும், முதன்மை செயலாளருமான ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார்.

பிரீபெய்டு செல்போன் சேவைகள் மற்றும் இணையதள சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதாகவும் சுற்றுலா பயணிகளின் நலனுக்காக சுற்றுலா தலங்களில் இன்டர்நெட் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close