[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

‘ஹக்ஸ் ஆர் ஹை-ஃபை’- மாணவர்களை வரவேற்கும் ஆசிரியரின் வைரல் வீடியோ

telangana-teacher-viral-video

தெலங்கானாவில் ஆசிரியர் ஒருவர் மாணவ - மாணவிகளிடம் பழகும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக ஆசிரியர்களை பார்த்தாலே மாணவ மாணவிகளுக்கு இனம் புரியாத பயம் வந்துவிடும். பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது கூட சந்தேகங்கள் ஏற்பட்டால், ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறாமல் பயத்திலேயே பாதி மாணவர்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர் மீது தேவையற்ற பயம் இல்லாமல் இருந்தால்தான் சந்தேகத்தை கூட கேட்டு தெளிவு பெற முடியும். இந்நிலையில் தெலங்கானவில் ஆசிரியர் ஒருவர் மாணவ- மாணவிகளிடம் பழகும் விதம் பலரையும் கவர்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அதாவது வகுப்பறை சுவரில் 4 வடிவங்கள் வரையப்பட்டுள்ளன.  கைகுலுக்குதல், இதய வடிவம், ஃபிஸ்ட் பம்ப் மற்றும் ஹை-ஃபை போன்ற வடிங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த வடிவங்களை மாணவர்கள் தொடும்போது அதற்கேற்றவற்றை ஆசிரியர் மாணவர்களிடம் செயல்படுத்துவார். உதாரணத்திற்கு ஒரு மாணவர் கைகுலுக்குதல் சிம்பளை தொடுகிறார் என்றால், ஆசிரியர் அந்த மாணவரிடம் கைகுலுக்குவார். அதுவே இதய வடிவத்தை தொட்டால், ஆசிரியர் அந்த மாணவரை ஆரத்தழுவி கொடுப்பார்.

இந்த முறை தெலங்கானாவில் பிரபலம் அடைவதற்கு முன் பாலஸ்தீனத்தில்தான் பிரபலமாக இருந்தது. பாலஸ்தீனத்தில் பள்ளி வருட விடுமுறை முடிந்து வரும் மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்கும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது அதனை தெலங்கானா ஆசிரியர்களும் பின்பற்றியுள்ளனர். இதுகுறித்து தெலங்கானவை சேர்ந்த பள்ளி பிரின்சிபல் ரூபா கூறும்போது, “ மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளுடன் பள்ளிக்கு வருகின்றனர். அவர்களை இப்படி வரவேற்கும்போது உண்மையிலேயே மிகுந்த உணர்சிமயமாக இருந்தது” என தெரிவித்தார்.

Courtesy: TheNewsMinute

https://www.thenewsminute.com/article/hugs-or-high-five-inspired-viral-video-telangana-teacher-greets-students-love-101606?amp&__twitter_impression=true

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close