[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜானாவை நோக்கி நாம் செல்லவில்லை; மக்களின் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS பேருந்து கட்டண உயர்வை மனவருத்தத்தோடு மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்- உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியுடனான 29 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்கிறது சிவசேனா
  • BREAKING-NEWS திடீரென APP மூலம் அரசியலில் நடிகர்கள் இறங்கியுள்ளனர்; அது அவர்களுக்கு ஆப்பாக தான் முடியும்- ஜெயக்குமார்
இந்தியா 12 Aug, 2017 10:46 AM

குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

gujarat-highcourt-given-life-time-imprisonment-to-bjp-mla-and-3-others

2004-ம் ஆண்டு நிலத்தகராறில் நிலேஷ் ரையானி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 3 பேருக்கும் குஜராத் உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.  

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 2004-ம் ஆண்டு நிலத்தகராறில் நிலேஷ் ரையானி என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஜெயராஜ்சிங் ஜடேஜா உள்பட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த ராஜ்கோட் விரைவு நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு ஜெயராஜ்சிங் ஜடேஜா உள்ளிட்ட 15 பேரையும் விடுவித்தது. சமீர் பதான் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

விசாரணையில் நிலேஷ் ரையானியை சுட்டுக்கொன்றது ஜெயராஜ்சிங் ஜடேஜா என தெரியவந்தது. அவருக்கு உடந்தையாக மகேந்திரசிங் ராணா, அமர்ஜித்சிங் ஜடேஜா ஆகியோர் இருந்துள்ளனர். இதையடுத்து 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்த உயர்நீதிமன்றம், சமீர் பதான் உள்ளிட்ட 13 பேரையும் விடுவித்தது. ஜெயராஜ்சிங் ஜடேஜா, தற்போது பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திரசிங் ராணா, 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close