[X] Close

"என்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்வேன்!" - சஞ்சு சாம்சன்

ஐபிஎல் திருவிழா

Want-to-play-my-shots-ready-to-accept-failures-on-the-way-says-Sanju-Samson

எப்போதும் போல தன்னுடைய அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுவேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. இப்போது ராஜஸ்தான் தான் விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் 2 இல் தோல்வியும் ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் பஞ்சாப்க்கு எதிராக அபாரமாக விளையாடி சதமடித்தார். ஆனால் அடுத்து டெல்லிக்கு எதிரான போட்டியில் 4 ரன்களும், நேற்றையப் போட்டியில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

image


Advertisement

இது குறித்து பேசிய சஞ்சு சாம்சன் "டி20 ஆட்டங்களில் இதுபோன்று எனக்கு தொடர்ந்து நடக்கிறது. டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன் நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய ரிஸ்கை எடுத்தால்தான் என்னால் சதமடிக்க முடிந்தது. அந்த நாளில் எந்தவிதமான மனநிலையில் இருக்கிறோமோ அப்படிதான் ஆட்டிங்கள் அமையும். இதற்காக நான் என்னுடைய பாணியை மாற்ற மாட்டேன். எப்போதும் போல இனி வரும் போட்டிகளில் என்னுடைய வழக்கமான பாணியை கடைப்பிடிப்பேன்" என்றார்.

மேலும் "தோல்வி குறித்து வருத்தமாகவே இருக்கிறது. அதேபோல நான் ஆட்டமிழக்கும் விதமும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இனி வரும் போட்டிகளில் அணியின் வெற்றிக்கு என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அதேபோல அணியில் ஷிவம் துபே 4 ஆம் இடத்தில் களமிறங்குவதும், அதற்கடுத்து டேவிட் மில்லர் களமிறங்குவதும் அணிக்கு நிச்சயம் பக்கபலமாகவே இருக்கும்" என்றார் சஞ்சு சாம்சன்.


Advertisement

Advertisement
[X] Close