இன்றைய காலை தலைப்புச் செய்திகள் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் பஞ்சாப் அணியின் தோல்வி வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி வரை பல முக்கிய செய்திகளை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்
  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு.

  • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்.

  • கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் செல்போன் எங்கே என்பது குறித்து சடலம் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்தின் கிணற்றில் தேடி வரும் காவல்துறை.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்pt web
  • கோடை வெயிலுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் 3வது நாளாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சியில் சாலைகளில் ஆறுபோல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

  • புதுக்கோட்டையில் நகைக்கடை ஒன்றில் போலி முத்திரையுடன் நகை விற்பனை செய்யப்பட்டுளது. இதில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
”My v3 ads நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால்..” - கோவை போலீசார் விடுத்த எச்சரிக்கை
  • ஆந்திர மக்கள் மோடியையும், ஜெகன்மோகனையும் புறக்கணிப்பார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா, புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி.

  • ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார். இதனால் குப்பம் தொகுதி மக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிணை கிடைக்குமா? இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.

  • காசாவிற்கு நிவாரணப் பொருட்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து, சாலையில் கற்களைப் போட்டு மறியலில் ஈடுபட்ட இஸ்ரேலியர்கள்.

  • ஐபிஎல்லில் பஞ்சாப்பை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி. 12 போட்டிகளில் எட்டில் தோல்வியால், பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது பஞ்சாப் கிங்ஸ்.

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
‘அதிவேக 1000 சிக்சர்கள்' முதல் '262 ரன்சேஸ்' வரை.. நடப்பு IPL தொடரில் படைக்கப்பட்ட 5 இமாலய சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com