“மாற்றம் மாற்றம் என்று பேசினால் போதாது; ஏழை மக்களின் பசியை போக்க வேண்டும்” - நடிகர் ராகவா லாரன்ஸ்

“மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டிருந்தால் போதாது. ஒவ்வொரு ஊரில் உள்ள மக்களின் கண்ணீரை துடைத்து பசியை போக்க வேண்டும்” என்று நடிகர் ராகவா லாரன்ஸ் பேசினார்.
நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ்புதிய தலைமுறை

செய்தியாளர்: நிக்சன்

நடன இயக்குநர், நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ், தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மே 1ஆம் தேதி சேவை என்ற அறக்கட்டளையின் மூலமாக ‘மாற்றம்’ என்ற பெயரில், கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இவரது முயற்சிக்கு நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து தெரிவித்ததோடு லாரன்ஸ் உடன் இணைந்து தானும் சேவை செய்யவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ரஜினிகாந்த், சீமான் உள்ளிடோரும் லாரன்ஸின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மக்களுடன் ராகவா லாரன்ஸ்
மக்களுடன் ராகவா லாரன்ஸ்

இந்நிலையில், மாற்றம் என்ற பெயரில் முதற்கட்டமாக கஷ்டப்படும் விவசாயிகள் பயன்படும் வகையில், அவர்களை தேடிச் சென்று 10 டிராக்டர்கள் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி முதல் டிராக்டரை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணன் என்பவரின் குடும்பத்தினருக்கு வழங்கினார் அவர்.

பின்பு காஞ்சிபுரம் அக்கினம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் குடும்பத்தினருக்கு டிராக்டர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து நேற்று திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மாரியப்பன் என்பவருக்கு டிராக்டர் வழங்கினார். அப்போது பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அவரிடம் கொடுத்து புகைப்படம் எடுத்தனர். அப்போது அந்த குழந்தைகளை கொஞ்சி முத்தமிட்டு மகிழ்ந்தார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்
'தயவுசெஞ்சு வாங்க.. உங்களதான் நம்பியிருக்கோம்'- இந்தியாவுக்கு கோரிக்கை வைத்த மாலத்தீவு அமைச்சர்!

முன்னதாக அவருக்கு அந்த ஊர் மக்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் பேசிய லாரன்ஸ், “ஒரு குடும்பத்திற்கு / தனி நபருக்கு ட்ராக்டர் என கொடுப்பதை விட, அந்தப் பகுதியில் இருக்கிற நல்ல சமூக சேவகருக்கு ட்ராக்டர் கொடுக்கவே நான் நினைக்கிறேன். அவர் தன் ஊரிலுள்ள கஷ்டப்படும் விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அந்த ட்ராக்ட்ரை அவர் ஒருவர் மட்டும் பயன்படுத்துவதை தாண்டி, மீதமுள்ள நேரத்தில் மற்றவர்களும் பயன்படுத்த உதவுவார் என்பதே என் நோக்கம்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டிருந்தால் போதாது; ஒவ்வொரு ஊரில் உள்ள மக்களின் கண்ணீரையும் துடைத்து பசியை போக்க வேண்டும்” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com