ராகுல் காந்தி
ராகுல் காந்திபுதிய தலைமுறை

அரசுப்பேருந்தில் பயணம் செய்து பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராகுல் காந்தி

தெலங்கானாவில் தேர்தல் பரப்புரைக்கு இடையே, அரசு பேருந்தில் திடீரென பயணம் மேற்கொண்டு பயணிகளுக்கு ராகுல் காந்தி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

17 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய தெலங்கானாவில், வரும் 13 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்நிலையில், மல்கஜ்கிரி மக்களவை தொகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, பரப்புரைக்குப் பிறகு அரசு பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார்.

ராகுல் காந்தி
குஜராத் | நீட் தேர்வில் முறைகேடு... தேர்வு மைய துணைக் கண்காளிப்பாளர் உட்பட மூவர் கைது!

அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் சேர்ந்து பயணித்த ராகுல் காந்தி, அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடியதோடு, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் அவர்களிடம் வழங்கினார்.

பின் மாநிலத்தில் தங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச பேருந்து பயணம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். திடீரென தங்களுடன் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பயணிகள், அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com