அக்‌ஷய திருதியை | வரலாறு காணாத அளவில் தங்கம் விலை உயர்வு - எப்போது குறையும்?

2024ஆம் ஆண்டு மைல்கல்லாக தங்கம் ஒரு சவரன் அரை லட்சத்தை தாண்டி விற்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் அக்ஷய திருதியை நாளில் தங்கம் விலை எவ்வளவாக இருந்தது? தங்கம் விலை தொடர்ந்து உயரக் என்ன காரணம்? விரிவாக பார்க்கலாம். 
தங்கம்
தங்கம்கோப்புப்படம்

செய்தியாளர் - கௌசல்யா

புதுசெயல்களை தொடங்கவும், புதுப்பொருட்களை வாங்கவும் தொடக்கமாக அக்ஷய திருதியை கருதப்படுகிறது. இந்நிலையில், எப்பவுமே தங்கத்தை வாங்க மக்கள் விரும்புவதற்கு காரணம் அணிந்து கொள்வதற்கு மட்டுமல்ல... தொடர்ந்து லாபத்தை கொடுத்து வருவதோடு, அவசரத் தேவைக்கு அடகுவைக்க பயன்படுவதும்தான்.

தங்கம்
தங்கம் pt

மஞ்சள் உலோகத்தின் விலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் எவ்வளவாக இருந்தது, தற்போது வரை அதன் விலையேற்ற விவரங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. 

1980ஆம் ஆண்டில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்... வெறும் ஆயிரம் ரூபாய்தான். 

தங்கம்
தங்கம் ஏன் சார் இப்படி ஏறுது... தங்கத்தில் முதலீடு செய்யலாமா..?

20 ஆண்டுகளுக்கு பிறகாக, 2004ஆம் ஆண்டில் தங்கம் ஒரு
சவரன் 5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. 2008இல் 10,000 ரூபாய்க்கும், 2010இல் ஒரு சவரன் 15,000 ரூபாய்க்கும் விற்பனையாகியிருக்கிறது.

2011ஆம் ஆண்டில் 20,000 ரூபாயாக இருந்த தங்கம் விலை, 2019ஆம் ஆண்டில் 25,000 ரூபாயாக அதிகரித்தது. 2020ஆம்
ஆண்டில் ஒரு சவரன் 30,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 2021ஆம் ஆண்டில் 40,000 ரூபாயாக விலை உயர்ந்தது. இந்நிலையில், தற்போது தங்கம் வரலாறு காணாத விலை ஏற்றமாக ஒரு சவரன் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தங்கம்
தங்கம் விலை உயர்ந்தாலும் திருப்பதி கோயிலுக்கு தங்க காணிக்கை குறையவில்லை!

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சிறிய, பெரிய தங்க நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 20 சதவிகித கடைகள் சென்னையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கொரோனாவுக்கு பிறகான நாட்களில் இருந்தே தங்கத்தின் விலை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியதை பார்க்க முடிகிறது.

இதற்கு சர்வதேச அளவில் நிகழும் போர் பதற்றங்கள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார மந்தநிலை போன்றவையால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதும் தங்கம் விலை உயரக் காரணமாக அமைந்துள்ளது. எனவே தங்கம் வாங்க நம்பிக்கை மட்டுமே காரணமாக கூறமுடியாது.

தங்கம்
தங்கத்தை விடுங்க... வெள்ளி விலை ஏற்றத்தை கவனிச்சீங்களா..?

2018ஆம் ஆண்டு வந்த அக்ஷய திருதியையன்று தங்கம் ஒரு கிராம் 2,978 ரூபாயாக இருந்தது. 2019ல் 3,022 ரூபாயாக
உயர்ந்த தங்கம் விலை, 2020ஆம் ஆண்டு 15 சதவிகிதம் உயர்ந்து 4,509 ரூபாயாக அதிகரித்தது. 2021ல் 4,492 ரூபாயாகவும், 2022ல் 4,816 ரூபாய்க்கும், 2023ல் 5,665 ரூபாய்க்கும் விற்கப்பட்ட
தங்கம், தற்போது 6,600 ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது

வீடுகளில் ஆபரணத் தங்கத்தை பாதுகாப்பது தற்போதுள்ள காலத்தில் சிரமமாகவே உள்ளது. எனவே, அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே தங்கத்தை ஆபரணமாக வைத்துக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்ட் , பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளுடன் ஒப்பிடும்போது தங்கம் தொடர் ஏற்றத்தில்தான் இருக்கிறது.

எனவே, GOLD BOND, GOLD ETF போன்ற திட்டங்களில் முதலீடு செய்து பாதுகாப்பான லாபத்தை பெற முடியும். இதன்மூலம், ஆபரணத் தங்கத்தை வாங்கும்போதும், விற்கும்போது செலுத்தும் செய்கூலி, சேதாரக் கட்டணங்கள் மிச்சமாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com