வெளியானது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் என்னவாக உள்ளது?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்முகநூல்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், 4,107 மையங்களில் 9 லட்சத்து 8 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி 88 முகாம்களில் நடைபெற்றது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்புதிய தலைமுறை

இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்ச்சி விகிதம்

இதன்படி தமிழ்நாட்டில் 91.55% தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.53%, மாணவர்கள் - 88.58% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தவகையில், மாணவிகள் 5.95% பேர் மாணவர்களை அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், புதுச்சேரியில் 91.28% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல காரைக்காலில் 78.20% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்

அரசுப்பள்ளிகள் - 87.90%

அரசு உதவிப்பெறும் பள்ளிகள் - 91.77%

தனியார் பள்ளிகள் - 97.43%

இருபாலர் பள்ளிகள் - 91.93%

பெண்கள் பள்ளிகள் - 93.80%

ஆண்கள் பள்ளிகள் - 83.17%

தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்தாண்டு 91.55% மாணவ மாணவியர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வு முடிவுகளானது பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கு அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை

www.results.digilocker.gov.in

www.tnresults.nic.in மற்றும் 

www.dge.tn.gov.in 

ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் முதல்முறையாக 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் தளத்தில் மூலமாகவும் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவ - மாணவிகளின் எண்ணிக்கை

  • தமிழ் - 8

  • ஆங்கிலம் - 415

  • கணிதம் - 20,691

  • அறிவியல் - 5,104

  • சமூக அறிவியல் - 4,428

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்

  • அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடத்தில் வேலூர் உள்ளது - 77.66%

  • தலைநகர் சென்னையில் அரசு பள்ளிகளில் மோசமான தேர்ச்சி விகிதம் - 79.07% பதிவாகியுள்ளது.

  • அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 38 மாவட்டங்களில் 37 ஆவது இடத்தில் சென்னை உள்ளது.

அரசு பள்ளிகள் தேர்ச்சியில் முதல் டாப் 5 மாவட்டங்கள்

முதலிடத்தில் அரியலூர் உள்ளது.

அரியலூர் - 96.20%

சிவகங்கை - 95.45%

கன்னியாகுமரி - 95.17%

ராமநாதபுரம் - 94.71%

திருச்சி - 93.85%

அரசு பள்ளிகள் தேர்ச்சியில் கடைசி 5 மாவட்டங்கள்

வேலூர் - 77.66%

சென்னை - 79.07%

செங்கல்பட்டு - 79.20%

திருவள்ளூர் - 80.06%

ராணிப்பேட்டை - 82.21%

மேலும், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணை தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2 ஆம் தேதி மறு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com