சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்
சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்puthiya thalaimurai

சவுக்கு சங்கர் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

கோவை சிறையில் இருக்கும் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: V.M.சுப்பையா

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து “கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளது. சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்ட்விட்டர்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத் துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை” என்றார். தொடர்ந்து ‘சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்?’ என பதிலளித்த அவர், “அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம். அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது” எனவும் தெரிவித்தார்.

சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்
நீதிமன்றம் உத்தரவு: கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை

மேலும், “சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கைபடி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர் PT

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

சவுக்கு சங்கர் - சென்னை உயர் நீதிமன்றம்
தேனியில் சவுக்கு சங்கர் கைது: கோவை கொண்டு செல்லும் வழியில் போலீஸ் வாகனம் விபத்து! லேசான காயம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com