10, 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்!

“10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்” - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
விஜய்
விஜய்புதிய தலைமுறை

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்புதிய தலைமுறை

இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், “தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்!” என தெரிவித்துள்ளார்.

விஜய்
வெளியானது 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்... அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் என்னவாக உள்ளது?

மேலும் “அனைவரும் இனி தத்தம் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறைசார்ந்த வெற்றிகளைக் குவித்து, வருங்காலச் சமூகத்தின் சாதனைச் சிற்பிகளாக வலம் வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த வருடம் ஜூன் மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 234 தொகுதி மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டுச் சான்றிதழ்களும், உதவித்தொகையும் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நடிகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
நடிகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்முகநூல்

அச்சமயம் சுமார் 12 மணி நேரம் வரை நின்றுகொண்டே பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார் விஜய். அதற்குப் பின் தற்போது மீண்டும் மாணவர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜய்
“உனக்குள்ள ஒருத்தன் இருப்பான்; அவன் சொல்றதை மட்டும்...” - மாணவர்களுக்கு விஜய் சொன்ன அறிவுரை! #Video

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 10 ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம், 91.55 சதவிகிதம் என்றுள்ளது. வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் (5.95 சதவிகிதம் கூடுதலாக) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 88.58 சதவிகிதம் பேரும், மாணவிகள் 94.53 சதவிகிதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

விஜய்
வெளியானது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... இம்முறையும் மாணவிகளே அதிக சதவிகிதம் தேர்ச்சி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com