விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் படிப்பிடிப்பு... சண்டை காட்சிகளில் தூள் கிளப்பும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்புதிய தலைமுறை

செய்தியாளர்: ரகுமான்

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம்  திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 

இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என பலர் நடிக்கின்றனர்.

ரஜினிகாந்த்
"நல்ல கருத்துள்ள பொழுது போக்கு திரைப்படமாக இருக்கும்" - ‘தலைவர் 170’ குறித்து ரஜினி கொடுத்த அப்டேட்!

ரஜினிகாந்தின் 170வது திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் ஏழு நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது 4 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டவருடன் ரஜினிகாந்த் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்டையன்
வேட்டையன்Teaser

இந்நிலையில் படப்பிடிப்பு முடித்து கேரவனில் இருந்து வேட்டி சட்டையுடன் ரஜினிகாந்த் இறங்கி வரும் காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com