திருப்பத்தூர்: கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு – மது போதையில் அட்டகாசம் செய்த கணவர் கைது

மனைவி சந்தேகப்பட்டதால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி மது அருந்திவிட்டு சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - பேரணாம்பட்டு புறவழிச்சாலையில் உள்ள முருகன் திரையரங்கம் அருகே நேற்று இரவு மது போதையில் இளைஞர் ஒருவர் அரை நிர்வாணமாக சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, ஆம்பூர் நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மதுபோதையில் அலப்பறையில் ஈடுப்பட்ட இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

Viral video
Viral videopt desk

விசாரணையில், அந்த இளைஞர் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சேட்டு (22) என்பதும், இவர் காட்பாடியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இவருக்கு திருமணமான நிலையில், இவரது மனைவி 3 மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், நேற்று கணவன் மனைவி இருவரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, அப்போது இவரது மனைவி, ‘வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறாயா?’ என்று கேட்டுள்ளார்,

Accused
விருதுநகர்: வருமான வரித்துறை அதிகாரி எனக் கூறி பட்டாசு வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடி - 4பேர் கைது

இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, ஓடும் பேருந்தில் இருந்து இறங்கி ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு மதுபோதையில் வாகனங்களை நிறுத்தி அலப்பறையில் ஈடுப்பட்ட போது, அங்கு வந்த சேட்டுவின் தந்தை சுதாகர், சேட்டுவை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

இவையாவும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்த நிலையில், உடனடியாக சேட்டுவை கைது செய்த ஆம்பூர் நகர காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com