’LSG ஓனர் எல்லை மீறிவிட்டார்..’ ’நீங்க வேறு அணிக்கு செல்லுங்கள் ராகுல்’ என கொந்தளித்த ரசிகர்கள்!

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த பிறகு, LSG உரிமையாளர் கேப்டன் கேஎல் ராகுலிடம் எல்லை மீறி காரசாரமாக விவாதித்தது இணையைத்தை அதிரச்செய்தது.
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்x

நடப்பு ஐபிஎல் தொடரில் அடித்தால் 250 ரன்கள் தான் என ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணி எதிரணிகளுக்கு தொடர்ந்து தலைவலியை ஏற்படுத்திவருகிறது. அவ்வணியின் டாப் 3 பேட்டர்களாக வரும் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசன் மூன்று வீரர்களும் 200-250 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி பவுலர்களுக்கு மரணபீதியை ஏற்படுத்திவருகின்றனர். இதனால் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒவ்வொரு அணிகளும் ஒரு பவுலினிங் பிளானோடு தான் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் அணி ஒரு விக்கெட்டை கூட விட்டுக்கொடுக்காமல் 166 ரன்கள் என்ற இலக்கை வெறும் 9.4 ஓவரில் எட்டி மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. 16 பந்துகளில் அரைசதம், 19 பந்துகளில் அரைசதம் என துவம்சம் செய்த SRH தொடக்கவீரர்களுக்கு எதிராக, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுலின் எந்த திட்டமும் பலனளிக்கவில்லை.

டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா
டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா

இந்த மிகப்பெரிய தோவ்லியின் மூலம் படுமோசமான ரன்ரேட்டை அடைந்த லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்து பிளேஆஃப் செல்வதற்கான ரேஸில் கடினமான நிலைக்கு சென்றது. இதனால் விரக்தியடைந்த லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுலிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

கேஎல் ராகுல்
’நீ சிரிக்கலனா உன்கிட்ட பேசமாட்டேன்..’! ஷசாங் சிங்கிற்கு நம்பிக்கை கொடுத்த Bairstow-ன் வார்த்தைகள்!

என்ன நடந்தது?

2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் எலிமினேட்டர் வரை முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ள 4 அணிகளில் ஒன்றாகவே ஜொலித்தது. ஆனால் அவர்களின் முக்கிய வீரர்களான மயங்க் யாதவின் காயம், டி-காக்கின் ஃபார்ம் அவுட் காரணமாக சரியான பிளேயிங் லெவனை எடுத்துவர முடியாமல் கடைசி 4 போட்டிகளில் மூன்றில் தோற்று தடுமாறி வருகிறது.

mayank yadav
mayank yadav

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்தபோதும், பவர்பிளேவில் சிறப்பாக செயல்பட முடியாமல் போன லக்னோ அணி வீரர்களால் அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. பதோனி மற்றும் பூரன் இருவரின் அதிரடியால் 166 ரன்களை எட்டினாலும், அவர்களால் பலம்வாய்ந்த சன்ரைசர்ஸ் அணியை சமாளிக்கமுடியாமல் போனது. ஆட்டத்தில் கேஎல் ராகுலின் பேட்டிங் மட்டுமில்லாமல், கேப்டன்சியும் சுமாராகவே இருந்தது.

kl rahul
kl rahul

இதனால் போட்டியின் தோல்விக்கு பிறகு கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையான வாக்குவாதம் நடத்திய அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரசிகர்களை முகம்சுளிக்க செய்தார். கோயங்கா கோவமாக எல்லை மீறி பேசினாலும் அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்ட ராகுல் வாடிய முகத்துடன் திரும்பினார்.

கேஎல் ராகுல்
“SRH என்னை சோஷியல் மீடியாவில் Block செய்தபோது உடைந்துவிட்டேன்..”! - எமோசனலாக பேசிய டேவிட் வார்னர்

நீங்கள் எல்லை மீறிவிட்டீர்கள்.. கொந்தளித்த ரசிகர்கள்!

சஞ்சீவ் கோயங்காவின் மோசமான அணுகுமுறையை பார்த்த ரசிகர்கள், கேஎல் ராகுலுக்கு ஆதரவாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஒரு ரசிகர், “ஆம் உண்மை தான் அவர் இந்தமுறை சரியாக விளையாடவில்லை, ஆனால் இவ்வளவு மோசமாக நடத்தும் அளவுக்கு அவர் குறைந்துவிடவில்லை. இந்தியாவிற்கு டாப் லெவல் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீரருக்கு எதிராக நீங்கள் எல்லை மீறிவிட்டீர்கள்” என்று காட்டமாக பதிவிட்டார்.

மற்றொருவர், “இந்தியாவிற்காக தலைசிறந்த வீரராக இருந்துவரும் கேஎல் ராகுல் இந்தளவு மோசமான அணுகுமுறையை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு கோவம் இருந்தாலும் மூடிய கதவுகளுக்கு பின்னாலோ அல்லது டீம் மீட்டிங்கிலோ பேசிக்கொள்ளுங்கள், பொதுவெளியில் இப்படி நடந்துகொல்வது தகுதியற்ற செயல்” என்று கடுமையாக சாடினார்.

மேலும் ஒருவர் “கேஎல் ராகுல் நீங்க இந்த அணியிலிருந்து வெளியேறுங்கள்” என்றும், ஆர்சிபி ரசிகர்கள் தங்களுடைய கர்நாடகா வீரரை “ஆர்சிபி அணிக்கே வந்துவிடுங்கள்” என்றும் கூறி ஆதரவு குரல் கொடுத்துவருகின்றனர்.

கேஎல் ராகுல்
அன்று RCB அணியில் WaterBoy.. இன்று 2 அணிகளை காலிசெய்த Head! முதல் அணியாக வெளியேறிய MI! அடுத்து LSG?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com